முன்பே கூறியதுபோல் என் இரண்டாம் வலைப்பதிவு உத்தம சோழனை பற்றியே.
உத்தம சோழன் (மதுராந்தகன்) பற்றிய ஒரு சில தகவல்களை சென்ற வலைப்பதிவிலேயே கூறிவிட்டேன் எனலாம்.
உத்தம சோழனே இரண்டாம் பராந்தகனுக்கு பிறகு சோழ அரியணையில் அமர்ந்தவர். இவர் சோழ மாமன்னனாய் இருப்பினும், இவர் ஆட்சி பீடத்தில் ஏறிய விதமும் இவர் ஆட்சியில் நடந்த சில நிகழ்வுகளும் இவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஆராயமுடியாத வண்ணம் இருக்கின்றன. அவற்றை பற்றியே இந்த சிறிய வலைப்பதிவு.
ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்ட பின்பு சோழ அரியணையில் அமரப்போவது யாரென்ற கேள்வி எழத்தொடங்கியதும் அருண்மொழிவர்மன் உள்நாட்டுக் கலவரம் மூள்வதைத் தடுக்க தன் சிற்றப்பனுக்கு (மதுராந்தகன்) வழி விட்டமை நாம் அறிந்ததே.
ஆதித்ய கரிகாலனை கொல்வதன் மூலம் அருண்மொழிவர்மனுக்கும் மதுராந்தகனுக்கும் இடையே மூளும் பூசல் கலவரமாக உருவெடுக்க இடையே நாம் மதுரையை மீட்டு விடலாமென்ற பாண்டியர்களின் கணக்கீட்டை அருண்மொழிவர்மன் மிகவும் சாதுர்யமாக முறியடித்தார். ஆக
பாண்டியர்களின் திட்டம் தவிடு பொடியானது.
உத்தம சோழன் பதினாராண்டு காலம் ஆட்சி பீடத்தில் இருந்ததாகவும் அக்காலத்தில் சோழர்கள் எவ்விதமான போரிலும் ஈடுபடவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவர் சிறந்த சிவ பக்தராக இருந்திருக்க கூடும் என்றே தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் இவருக்கு பின்வந்த ராஜ ராஜனே சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து திருவாசகத்தை மீட்டார் என்று தெரியவருகிறது. எனவே சிறந்த சைவ பக்தனாக இருக்கும் ஒருவர் தான் வழிபடும் கடவுளின் பெருமை பாடும் ஒரு நூலை மீட்டெடுக்கத்தான் முயற்சிப்பாரே தவிர அந்த நூல் மக்களிடம் சேராதவாறு முடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.
சரி ஆதித்யனின் மரணம் பற்றிப் பேசுவோம். சோழம் ஒரு சிறந்த வீரனை இழந்திருக்கிறது. எனவே அடுத்து அரியணை ஏறும் அரசன் இக்கொலைக்குக் காரணமாக இருந்தவர்களை தண்டிக்க முற்படுவானே தவிர அவர்களை உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்க்கமாட்டான். ஆனால் உத்தமர் காலத்தில் ஆதித்யனை கொன்றவர்கள் பெரும் பதவியில் இருந்தது ராஜ ராஜனின் (அருண்மொழிவர்மன்) உடையார்குடி கல்வெட்டுகள் தெரியப்படுத்துகிறது.
ராஜ ராஜன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் உடையார்குடியில் வசித்து வந்த ஆதித்யனின் கொலைக்கு காரணமான சில பேரின் சொத்தை பறிமுதல் செய்து அவர்களை நாடு கடத்தினார் என்று அவரது கல்வெட்டுகள் தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. எனவே உத்தம சோழரின் ஆட்சி காலத்தில் ஆதித்யனை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்படுகிறது.
இவையெல்லாம் இவருக்கு எதிராக இருக்கும் சில விவரங்கள்.
ஆதரவான ஒரு தகவல் என்னவெனில் ராஜேந்திர சோழனின் பெயர்களில் மதுராந்தகன் என்பதும் ஒன்று.
எனவே உத்தம சோழன் (மதுராந்தகன்) மேல் ராஜ ராஜனுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்திருக்குமானால் தன் புதல்வன் ராஜேந்திரனுக்கு இந்தப்பெயர் கிட்டியிருக்க வாய்ப்பில்லை.
மேலும் உத்தம சோழரின் ஆட்சி காலத்தில் ஆதித்யகரிகாலனை கொலை செய்தவர்கள் தண்டிக்கப் படவில்லை என்றுதான் கூற முடிகிறதே தவிர இவரது ஆட்சி காலத்தில் அதற்கான விசாரணை நடைபெறவில்லை என்று கூறமுடியவில்லை. விசாரணை நடைபெற்று கொலையாளிகளை அடையாளம் காணமுடியாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.
வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்றால் கூட சொல்லலாம் போலும். ஆனால் உத்தம சோழர் நல்லவரா கெட்டவரா என்று என்னால் வரையறுக்க முடியவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். :)

Hats off your research and angle of approach in this case. I appreciate you...
ReplyDeleteNote for Viewers: If you want clear sense of judgement please read Ponniyin selvan
அவர் நல்லவரே...!!அவர் தீவிர சிவனடியாராய் இருந்த காரணத்தினாலேயே அவரால் சிதம்பரம் கோவில் குருக்களின் நம்பிக்கையை அழித்து திருவாசகத்தை மீட்கமுடியவில்லை.மேலும் அவர் ஆதித்தனின் கொலைக்கானவர்களை கண்டுபிடிக்க முயன்ற அதேவேளையில்,பாண்டிய உள்நாட்டு போரையும் தடுக்கவேண்டி இருந்ததால் மக்களின் நலனிலே அக்கறைக்கொண்டு கலகத்தை தடுப்பதில் தீவிரம் காட்டினார்.மறுபக்கம் விசாரணையும் நடந்து கொண்டுதான் இருந்தது.
ReplyDelete