நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை படித்து கொண்டிருந்த பொழுது சோழர்களின் நாணய அளவீடுகள் பற்றி படித்தேன். அதை பற்றி ஒரு பதிவை எழுதுவோம் என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு. மற்றபடி என்னுடைய மூளையை கசக்கி பிழிந்து எழுதியதல்ல. சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஈயடிச்சான் காப்பி :)
சோழர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் இரு வகையான நாணய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலாம் வகை கட்யனா (Gadyana) என்று அழைக்கபெறும் நாணயவகை. இதன் எடை 3.75 கிராம் முதல் 3.9 கிராம் வரை இருக்கும். புத்தகத்தில் இதன் எடை 58 grain முதல் 60 grain வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு grain என்பது சுமார் 65 மில்லிகிராம் (Milligram) இருக்கும். உத்தம சோழரின் காலத்தை சேர்ந்த ஒரு நாணயத்தின் எடை 50 grain முதல் 60 grain வரை இருந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது உண்மையானால் இந்த நாணயம் கட்யனா வகையை சார்ந்தது என்று கூறலாம்.
ஆனால் சோழர்கள் அதிக அளவில் பயன்படுத்திய நாணய எடைமுறை கழஞ்சு (Kazhanju) என்பதாகும். இந்த நாணய முறை முதலாம் பராந்தக சோழர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஒரு கழஞ்சு என்பது 5 கிராம் தங்கத்துக்கு சமானம். (1 kazhanju = 5 grams of Gold)
கழஞ்சு என்னும் எடைமுறையில் இருந்து வந்த மேலும் சில எடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1) மாஞ்ஞாடி (Manjaadi)
இருபது மாஞ்ஞாடிகள் என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
1 Kazhanju = 20 Manjaadi
2) பணவெடை (Panavedai)
ஐந்து பணவெடை என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
1 Kazhanju = 5 Panavedai
4 Manjaadi = 1 Panavedai
3) குன்றிமணி (Kundrimani)
குன்றிமணி என்பது இன்றளவும் நமது வழக்காடு மொழியில் இருந்து வருகிறது. உனக்கு குன்றிமணி அளவு கூட தங்கம் கிடையாது என்று வழக்கு மொழியில் கூறுவதுண்டு.
ஒரு குன்றிமணி என்பது அரை மாஞ்ஞாடிக்கு நிகரானது. அதாவது 40 குன்றிமணி சேர்ந்தது ஒரு கழஞ்சு.
1 kundrimani = 0.5 maanjadi
40 kundrimani = 1 kazhanju
4) நல் எடை (Nal Yedai)
இறுதியாக மிக சிறிய எடையான நல் எடை. ஒரு நல் எடை என்பது கால் குன்றிமணிக்கு சமமான எடையாகும்.
1 nal yedai = 0.25 kundrimani
160 nal yedai = 1 kazhanju
ராஜ ராஜ சோழரின் 31 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று மதுராந்தக மடை என்னும் நாணய எடையை குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜ ராஜரின் காலத்தவையாக இருப்பின் இந்நாணயங்கள் உத்தம சோழர் காலத்தில் அச்சிடப்பட்டவயாக இருக்கும் என்று கூறலாம். உத்தம சோழரின் மற்றொரு பெயர் மதுராந்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. மடை என்னும் நாணயம் ஒரு கழஞ்சின் மொத்த எடையான 5 கிராம் தங்கத்தையும் ஒரே நாணயத்தில் வார்க்க பெற்றிருக்கும். அதாவது ஒரு மடை நாணயத்தில் 5 கிராம் தங்கம் இருக்கும்.
ஒரு மடை நாணயத்தின் பாதியே ராஜ ராஜன் காசு என்றழைக்கப்பட்டுள்ளது. இந்த காசு முதலாம் ராஜராஜரின் காலத்தவை. ஆனால் காசு என்னும் இந்த நாணயம் என்பது முதலாம் ராஜராஜரின் காலத்திற்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகிறார். இந்த மடை என்பது பல்வேறு கல்வெட்டுகளில் அன்றாட பழங்காசு, பழங்காசு, அன்றாட நற்காசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய எடைகள் மற்றும் சோழர்களின் நாணய எடை முறையில் இலங்கையின் தாக்கம் ஆகியவை அடுத்த பதிவில்...
தொடரும்...

No comments:
Post a Comment